பிறந்த பச்சிளம் குழந்தையை பஸ் ஸ்டாண்ட்டில் வீசிச் சென்ற தாயால் பரபரப்பு!
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் பேருந்து நிலையம் ஒன்றில் பிறந்த பச்சைக் குழந்தையை வீசிச் சென்ற தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இன்று முள்புதரில் பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு இருந்த பயணிகளால் அக் குழந்தை மீட்கப்பட்டது.

பின்னர் அந்த குழந்தை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனே பேருந்து நிலையத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்ணையும் கண்டுபிடித்து அந்த பெண்ணை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கணவனை இழந்த அந்தப் பெண் ஜெயங்கொண்டத்தை அடுத்த அயன்தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் உறவினர் ஒருவருடன் வைத்திருந்த தொடர்பால் கர்ப்பமடைந்தார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வழக்கமாக பெண் சிசுக்களைத்தான் இப்படி வீசுவார்கள். இப்போது ஆண் சிசுக்களையும் வீச ஆரம்பித்திருப்பது சமூகக் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications