வெள்ள மீட்பில் ஈடுபட்டதா ஆர்.எஸ்.எஸ்?- கொதிக்க வைத்த ஃபோட்டாஷாப் படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவுவதாக வெளியான புகைப்படத்தால் கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். காஷ்மீர் வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போலியாக பதிவிடுவதாக கொந்தளிக்கின்றனர்.

வடகிழக்குப் பருவமழையைவிடவும் வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 2015-ம் ஆண்டு வெள்ள பாதிப்பு நிவாரண எண்களை எல்லாம் தற்போது வெளியிட்டு தகவல் பரப்புகின்றனர்.

New controversy erupts over RSS Photo

இதனால், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். தினம்தோறும் வருகின்ற நூற்றுக்கணக்கான அழைப்புகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய பா.ஜ.க நிர்வாகிகள் தகவல் ஒன்றை வெளியிட்டனர். மழை பாதிப்பு மீட்பு பணிகளில் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் ஈடுபடும் படத்தை வெளியிட்டு, சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதிபலன் பாராமல் சேவை செய்யும் ஸ்வயம் சேவகர்கள்! ஜெய் ஸ்ரீ ராம்' என பெருமிதப்பட்டுக் கொண்டனர்.

இந்தத் தகவலை பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் ஷேர் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், இதுபோன்ற தேவையற்ற செய்திகளைப் பரப்பாமல் இருப்பதே மக்களுக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய சேவையாக இருக்கும். சென்னையில் தற்போது பெய்து வரும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிபலன் பாரா சேவை எனப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஆனால், இவர்கள் பதிவிட்டுள்ள படம் காஷ்மீர் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. காஷ்மீரை சென்னையாக உருமாற்றியுள்ளனர். காஷ்மீரில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்கள் யாரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதுபோன்ற செய்திகள் மூலம் மக்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவையை வெளிக்காட்ட முயல்கின்றனர். இதனால் அவர்களுக்குக் கெட்ட பெயர்தான் ஏற்படுமே தவிர, மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை உருவாக்காது என்றார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர், வெள்ள மீட்புப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவதாக யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படத்தை, நாங்கள் வெளியிட்டதாகப் பரப்புகின்றனர். இப்படியொரு சேவையில் ஈடுபட்டால், அதை நாங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டோம். எங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தப் படமும் வெளியாகவில்லை என்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
New controversy erupted over RSS photo which was take during Kashmir Floods.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற