வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்.. சென்னை வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும்- வீடியோ

    சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.

    [ வானிலை மையமும் அரசியல் செய்யுதா.. தினகரன் பொளேர் கேள்வி! ]

    வங்கக்கடலில் புயல்

    வங்கக்கடலில் புயல்

    இந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் புயலாக மாறும். பின்னர் இந்த புயல் ஒடிசா கரையை நோக்கி நகரும்.

    புயல்களால் மாற்றம்

    புயல்களால் மாற்றம்

    அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளதாலும் அரபிக்கடல், தென்னிந்திய கடற்பகுதி, வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் திசை மற்றும் ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணிநேரத்தில் புயல்

    அடுத்த 24 மணிநேரத்தில் புயல்

    இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் இருந்த சாதகமான சூழல் மாறியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மிதமான மழை, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    நாளை முதல் குறையும்

    நாளை முதல் குறையும்

    சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+