திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் கவலைக்கிடம்?
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் எஸ்.எம். சீனிவேலின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியை கடந்த 2011 தேர்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கியிருந்தது அதிமுக. இதனால் அங்கு போட்டியிட்டு ஏ.கே.டி. ராஜா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த முறை அதிமுகவே நேரடியாக போட்டியிட்டது.

முன்னாள் எம்.எல்.ஏவான 65 வயது சீனிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2001ல் இங்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் சீட் கிடைத்ததால் பெரும் ஆர்வத்துடன் சீனிவேல் தரப்பு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் சீனிவேல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து தற்போது வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சீனிவேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சீனிவேலின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அதிமுக தரப்பு கவலை அடைந்துள்ளது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications