திருச்சி: திருமணமான 2 வாரத்தில் விபத்தில் கணவர் கண் முன் புது மணப்பெண் பலி
திருச்சி: திருச்சியில் திருமணமான இரண்டே வாரத்தில் புதுமணப் பெண் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
திருச்சி பொன்மலை ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் சதீஷ் பாபு(29). திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலிய உதவியாளராக உள்ளார். அவருக்கும் ரேவதி என்ற பத்மாவதிக்கும்(26) கடந்த 4ம் தேதி திருச்சியில் திருமணம் நடைபெற்றது.
சதீஷ் திங்கட்கிழமை காலை பணிக்கு சென்றுவிட்டார். ரேவதி அவரது தாய் மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்து துணி எடுப்பதற்காக திருச்சி பெரிய கடை வீதிக்கு சென்றார். மதியம் பெரிய கடை வீதிக்கு வந்த சதீஷ் மனைவியை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார். பிற்பகல் 1.45 மணிக்கு அவர்களின் பைக்
தஞ்சை ரோட்டில் உள்ள கருப்பண்ண சாமி கோவில் அருகே செல்கையில் பைக் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது.
இதில் நிலைதடுமாறி விழுந்த ரேவதி பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் சென்றுவிட்டார். சதீஷ் சாலையின் மறுபக்கம் விழுந்தார். ரேவதியின் தலையில் பேருந்து ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த சதீஷ் கதறி அழுதார்.
இதற்கிடையே பேருந்து டிரைவர் வாகனத்தோடு கிளம்பினார். அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கினர். மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ள இந்த பகுதியில் தனியார் பேருந்துகளை இயக்கக் கூடாது என்று கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாகக் கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications