For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிழக்கு மண்டலத்திலும் மொத்தமாக அள்ளுகிறது திமுக - கருத்துக்கணிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மேற்கு மண்டலம், தெற்கு மண்டலத்தை போலவே கிழக்கு மண்டலத்திலும் திமுகவே அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது.

DMK lead to East Zone: news7-dinamalar survey

நேற்று முன்தினம் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த இரு மண்டலங்களிலும் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என நியூஸ் 7 மற்றும் தினமலர் கருத்துக்கணிப்பு கூறியது.

இந்நிலையில் இன்று கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 30 இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவுக்கு இரண்டு தொகுதிளில் வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக திமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு நிலவரம்:

திருச்சி மாவட்டம்:

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் அதிமுக 3 தொகுதியிலும், திமுக கூட்டணி 6 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

பெரம்பலூர் மாவட்டம்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் திமுகவுக்கு ஒரு தொகுதியும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் வெற்றி வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அரியலூர் மாவட்டம்:

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள இரண்டு தொகுதிகளில் திமுகவுக்கு ஒரு இடமும், பாமகவுக்கு ஒரு தொகுதியில் வெல்லும் நிலை உள்ளதாக கூறுகின்றது நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு

நாகை மாவட்டம்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 2 இடங்களிலும், திமுக கூட்டணி 4 தொகுதியையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

திருவாரூர் மாவட்டம்:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் நிலை உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு அதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறது நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு.

தஞ்சாவூர் மாவட்டம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் அதிமுக இரண்டு இடங்களில் மட்டும் வெல்லும் எனவும், திமுக 6 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு கூறுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெல்லும் என்றும், மீதமுள்ள 5 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் வாய்ப்புள்ளாத கூறுகின்றது நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு.

கரூர் மாவட்டம்:

கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் அதிமுக 1 தொகுதியில் மட்டும் வெல்லும் எனவும், திமுக 3 தொகுதியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

English summary
tamilnadu assembly election: News 7- Dinamalar opinion poll result for 41 constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X