தொடரும் கூடங்குளம் அணுமின் நிலைய விபத்துக்கள்: மனித உரிமை ஆணையம் கண்டிப்பு
சென்னை: தொடரும் விபத்துக்களை தவிர்க்க தேவையான பாதுகாப்பை அதிகரிக்குமாறு கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தை தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அணு உலையில் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வருகின்றனர். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை 1ல் இருக்கும் டர்பைன் கட்டிடத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது நீராவிக் குழாய் திடீரென வெடித்தது.
இந்த நீராவிக் குழாய் திடீரென வெடித்ததால் கொதிநீர் வெளியேறியது. இந்த கொதிநீர் வெளியேறிய போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூன்று பேர் அணு மின் நிலைய ஊழியர்கள், மூவர் ஒப்பந்த தொழிலாளிகள்.
இவர்கள் அனைவரும் முதலில் அணுமின் நிலைய வளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியானதும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி ஊழியர்களின் மருத்துவச் செலவு மற்றும் மாத ஊதியம் கிடைக்க வழிவகை செய்தது.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் அறிவித்தது. இந்த இழப்பீடு போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம், அணுஉலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 6 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் அணுஉலைகளில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதனால் தேவையான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தி கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications