வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த போலீஸ்.. பெண் புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி அதிரடி கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கல்லூரி கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி பாருக்காக பேசினார்?- வீடியோ

  அருப்புக்கோட்டை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவியின் வீட்டுக்கு போலீஸார் சென்ற நிலையில் அவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வர மறுத்ததை அடுத்து வீட்டின் பூட்டை உடைத்து போலீஸார் நிர்மலாவை கைது செய்தனர்.

  அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் ஆசையை பூர்த்தி செய்ய 4 மாணவிகளிடம் செல்போனில் படுக்கைக்கு அழைக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதையடுத்து நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களும் மாதர் சங்கங்களும் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தின. இதையடுத்து கல்லூரி முதல்வரின் புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  வட்டாட்சியர்

  வட்டாட்சியர்

  அவரிடம் விசாரணை நடத்த அருப்புக்கோட்டை கவிதா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸாரும் வட்டாட்சியிர் சிவ கார்த்தியாயினியும் சென்றனர்.

  நிர்மலா வெளியே செல்லவில்லை

  நிர்மலா வெளியே செல்லவில்லை

  அவரது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை திறக்க நிர்மலா தேவி மறுத்துவிட்டார். இதையடுத்து போலீஸார் அங்கு 2 மணிநேரமாக காத்திருந்தனர். எனினும் அவர் வெளியே வரவில்லை. நிர்மலா வெளியே செல்லவில்லை என்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறினர்.

  உறவினர்களுக்கு தகவல்

  உறவினர்களுக்கு தகவல்

  இதையடுத்து வேறு வழியில்லாமல் வீட்டின் பூட்டை உடைக்க திட்டமிட்டிருந்தனர். பின்னர் அவரது உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 7 மணி நேரமாக வீட்டை பூட்டி கொண்டு வெளியே மறுத்து வந்தார்.

  இறுதியில் கைது

  இறுதியில் கைது

  இந் நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த கணவர் சரவண பாண்டியும், சகோதரர் மாரியப்பனும் அவருடன் செல்போனில் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர் கேட்காததால் கணவர், சகோதரர் முன்னிலையில் கதவை உடைத்து நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Nirmala Devi is in the house locked inside and sh refused to come out while police and Tahsildar go for review.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற