தினகரன் மட்டுமல்ல... சசியையும் நீக்கினால்தான் இணைப்பு - ஓபிஎஸ் அணி திட்டவட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவினால் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அணிகள் இணைப்பது பற்றியும் பேசப்பட்டது.

இந்த கூட்டத்தில் சசிகலாவினால் டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதம் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் நியமனம் செல்லாது எனவும், அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்திருக்கிறார் எனவே அதுவும் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில் சசிகலாவினால் நியமிக்கப்பட்ட செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கையெழுத்து போடவில்லை.

ஓபிஎஸ் அணி

ஓபிஎஸ் அணி

எடப்பாடி பழனிச்சாமி அணியின் தீர்மானம் பற்றி ஓபிஎஸ் அணியில் ஆலோசிக்கப்பட்டது. இந்த தீர்மானம் பற்றி பேசிய அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன், சசிகலாவையும் நீக்கினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று கூறினார்.

இணைப்பு சாத்தியமாகுமா?

இணைப்பு சாத்தியமாகுமா?

ஓபிஎஸ் அணியின் முக்கிய கோரிக்கைகளான ஜெயலலிதாவின் மரண விசாரணை மற்றும் சசிகலா குடும்பத்தை மொத்தமாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அஸ்பயர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

சசிகலாவை நீக்க வேண்டும்

சசிகலாவை நீக்க வேண்டும்

டிடிவி தினகரனை மட்டுமே நீக்குவது எங்களுக்கு ஏற்புடையதல்ல. இது தினகரனின் சுற்றுப்பயணத்திற்கு வைக்கப்பட்ட செக் மட்டுமே. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சசிகலா பற்றி ஒரு வரி கூட எங்குமே இல்லை என்றும் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

என்னவாகும் அதிமுக

என்னவாகும் அதிமுக

டிடிவி தினகரனுக்கு செக் வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதன்மூலம் தினகரன் ஆதரவாளர்களின் ஆத்திரம் அதிகரித்துள்ளது. தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் 24 மணிநேரத்தில் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பதாக கூறியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
O.Panneerselvam team spokes person said that,their demand that a probe be ordered into the death of Jayalalithaa.
Please Wait while comments are loading...