• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு திமுக ரூ1 கோடி அள்ளி கொடுத்ததன் பரபர பின்னணி!

  By Lakshmi Priya
  |
   தமிழ் இருக்கைக்கு எஞ்சிய ரூ.1 கோடி இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் - மாஃபா பாண்டியராஜன்- வீடியோ

   சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு நிதி அளித்தால் ஆடிட்டிங்கில் சிக்கல் வந்து விடும் என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும், துணிந்து வந்து ரூ1 கோடியை வாரி வழங்கியவர் மு.க.ஸ்டாலின் என்று தமிழ் ஆர்வலர்கள் கொண்டாடுகின்றனர். மேலும் இந்த அறிவிப்பை தந்தை வழியில் ஸ்டாலின் ஆற்றிய தொண்டாகவே தமிழ் ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.

   அமெரிக்காவில் மாசசூஸெட்ஸ் மாகாணத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் உலகின் மூத்த மொழிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் தமிழுக்கென ஒரு இருக்கை அமைய வேண்டும் என அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

   ஏற்கெனவே மற்ற மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் இருக்கைக்கென ரூ 40 கோடி செலவாகும் என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறிவிட்டது.

   ஹார்வார்டு பல்கலைக்கழகம்

   ஹார்வார்டு பல்கலைக்கழகம்

   இந்தப் பணிக்காக மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞான சம்பந்தம் ஆகியோர் தலா 5 லட்சம் டாலர்களைக் கொடுத்துத் தொடங்கிவைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

   தொய்வு

   தொய்வு

   இதுதவிர, தனிநபர்களும் தமிழ் இருக்கைக்காக நிதியை வாரிக் கொடுத்தனர். சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலேயே, தமிழ் இருக்கைக்கு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்தார் ஜெயலலிதா. அடுத்து வந்த நாட்களில் அவர் இறந்துவிட, தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழக அரசின் கவனத்துக்குத் தகவலைக் கொண்டு சென்றனர் புலம்பெயர் தமிழர்கள். இதனையடுத்து, பத்து கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

   கை கொடுத்தார் ஸ்டாலின்

   கை கொடுத்தார் ஸ்டாலின்

   இந்நிலையில், வரும் ஜூன் மாதம் தமிழ் இருக்கைக்கான பணிகளைத் தொடங்க இருந்தனர் அமெரிக்காவாழ் தமிழர்கள். ஆனால், இன்னும் 2 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. நேற்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒரு கோடி ரூபாய் அறிவிப்பைக் கொண்டாடுகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள். அமெரிக்காவாழ் தமிழர் ஒருவரிடம் பேசினோம். " ஸ்டாலின் செய்த உதவி சாதாரணப்பட்டது அல்ல. இதற்கான முயற்சிகளைத் தொடங்கி வைத்தவர் மருத்துவர் ஜானகிராமன். தி.மு.க தலைமையின் கவனத்துக்கும் அவர்தான் கொண்டு சென்றார்.

   ஆடிட்டிங் பிரச்சினை

   ஆடிட்டிங் பிரச்சினை

   திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழி, புலம்பெயர் தமிழர் கால்டுவெல் ஆகியோரும் தி.மு.க தலைமையிடம், தமிழ் இருக்கைக்கு நிதி அளிப்பதன் அவசியம் குறித்து விளக்கி வந்தனர். அரசியல் கட்சியிடம் இருந்து நிதி செல்வதால், ஆடிட்டிங் உள்ளிட்டவைகளில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்ற விவாதம்தான் தி.மு.க தலைமையிடம் இருந்து வந்தது. இதன் காரணமாகவே, நிதி அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டது.

   என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்

   என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்

   இதனை விரும்பாத ஸ்டாலின், ' நிதி அளித்தே ஆக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதற்கான வழிமுறைகளை மட்டும் விளக்குங்கள். வேறு எந்த அறிவுரையும் தேவையில்லை' என உறுதியாகக் கூறிவிட்டார். இதன்பின்னர், ஹார்வர்டு நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு நடைமுறைகளைக் கேட்டறிந்தனர். தி.மு.க அளித்த உதவியால் ஹார்வர்டில் ஓரிரு மாதங்களில் தமிழ் இருக்கை அமைய இருக்கிறது.

   தமிழர்கள் பாராட்டு

   தமிழர்கள் பாராட்டு

   திருவள்ளுவர் சிலை, தமிழ் செம்மொழி உள்பட தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் கருணாநிதி. அவருடைய வழியிலேயே அவருடைய தனயனும் பயணிப்பதை புலம்பெயர் தமிழர்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர். இப்படியொரு இன்ப அதிர்ச்சி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை" என்றார்.

   திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    
    
    
   English summary
   Though there will raise auditing problem for a political party donates huge amount for Tamil Chair, DMK Working President MK Stalin announces to give the donation. Tamil Activists happy on hearing this.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more