அதெல்லாம் பிரதமருக்கு யாரும் கறுப்புக் கொடி காட்ட முடியாது.. தமிழிசை சவால்
தமிழகம் வரும் பிரதமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்ட முடியாது என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவண்ணாமலை : தமிழகம் வர இருக்கும் பிரதமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்ட முடியாது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த செயற்குழுவில் ஏப்ரல் 5ம் தேதி தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும், ஏப்ரல் 15ம் தேதி தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடிக்கு திமுக சார்பில் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று திருவண்ணாமலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு எந்த வித பாரபட்சமும் காட்டவில்லை.
நீதிக்கு உட்பட்டுத்தான் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது. எனவே, தமிழக எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழகம் வரும் பிரதமருக்கு யாரும் கறுப்புகொடி காட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications