எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்!
கீழடியில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் மத ரீதியான அடையாளங்கள், ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தொல்லியல் துறை கூறியுள்ளது.
Recommended Video
சென்னை: கீழடியில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் மத ரீதியான அடையாளங்கள், ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தொல்லியல் துறை கூறியுள்ளது.
மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இதில் இரண்டாம் கட்ட ஆராய்ச்சி தற்போது கீழடியில் வேகம் எடுத்துள்ளது. கடந்த வாரம் அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கு இருக்கிறது
மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.

எத்தனை வருடம்
இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு.

என்ன எல்லாம் கிடைத்தது
இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது.

குறிப்பு என்ன
இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அறிக்கை
இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயற்கை வழிபாடு
அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications