ஜெ.வுக்கு ஜாமீன் இல்லை.. பஸ்கள் ரத்து.. திருவண்ணாமலை கிரிவலத்தில் கூட்டம் இல்லை!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் போனதால் ஏற்பட்ட பதட்டசூழ்நிலை காரணமாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டதால் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு கூட்டம் வராமல் போய் விட்டது.

திருவண்ணாமலையில் பெளர்ணமி தோறும் கிரிவலம் வருவார்கள் பக்தர்கள். லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அப்போது அலை மோதும்.

நேற்று பெளர்ணமியையொட்டி கிரிவலம் நடந்தது. ஆனால் வரலாறு காணாத வகையில் கூட்டம் மிக மிக குறைவாக இருந்தது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காததால் பஸ்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டன. இதனால் பலரும் திருவண்ணாமலைக்கு வர முடியாமல் போனதே கூட்டம் இல்லாமல் போனதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

மேலும் கர்நாடகத்திலிருந்தும் பலர் கிரிவலம் வருவார்கள். கர்நாடகத்திலிருந்து நேற்று பெரும்பாலானவர்கள் வரவில்லை. பஸ்களும் அங்கிருந்து வரவில்லை. இதனால் கூட்டம் குறைந்து போய் விட்டது.

கிரவலம் சமயத்தில் திருவண்ணாமலை இந்த அளவுக்கு வெறிச்சோடியது இதுவே முதல் முறை என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+