ஏற்காடு இடைத்தேர்தல் திமுகவிற்கு ஆதரவு தர கம்யூனிஸ்ட்கள் மறுப்பு

ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 4ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக இடையே போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அனைத்து கட்சியினருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
தா. பாண்டியன்
இந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு கிடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை கடிதம் மூலமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிவிப்போம் என்று கூறினார்.
ஜி. ராமகிருஷ்ணன்
அதேபோல் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவளித்த தி.மு.க.வுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கருணாநிதியின் கடிதத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக பதிலை தெரிவித்துவிட்டனர். ஆனால் மற்ற கட்சிகள் இதுவரை எதுவும் வாய்திறக்கவில்லை. யாருக்கு யார் ஆதரவு தருவார்கள் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். அதன்மூலம் லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கான அச்சாரமாகவும் ஏற்காடு இடைத்தேர்தல் அமையும் என்பதும் முடிவாகும்.












Click it and Unblock the Notifications