அதிமுகவா? மநகூவா?: எங்க கூட்டணியை அறிவிக்க இன்னும் காலமிருக்கு... சொல்வது வாசன்
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் இருக்கிறது விரைவில் அறிவிப்போம் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி தமாகாவுக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அதில் தலையிட விரும்பவில்லை என்றும் வாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று படு பரபரப்பாக இயங்கி வருகின்றன.
ஆளும் கட்சியான அதிமுக தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் நேர்காணல் என பிஸியாகி விட்டது. திமுக தரப்போ காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பாஜகவும் ஒரு பக்கம் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த ஜி.கே. வாசனோ கூட்டணி பற்றி அறிவிக்க இன்னமும் காலமிருக்கிறது என்றே கூறிக்கொண்டிருக்கிறார்.
இன்று சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த வாசன், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவரை சந்தித்து கூட்டணி அமைத்துள்ளனர். தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி அமைத்துள்ளது என்பதை அவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள் நலக்கூட்டணி தங்களுக்கு ஏதுவான முடிவை அறிவித்துள்ளனர். மேலும் தாங்கள் ஏற்றுக் கொண்ட தலைமையை அறிவித்திருப்பது அவர்கள் உரிமை. அதை அவர்கள் உறுதிபட வெளிப்படுத்தியுள்ளனர். இதில் தமாகாவுக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அதில் தலையிட விரும்பவில்லை.
அதிமுகவுடன் கூட்டணியா என கேட்கிறீர்கள். தமாகா பொறுத்தவரை கூட்டணி பற்றிய இறுதி முடிவை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பேன். அதுவரை எந்தவிதமான யூகங்களுக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை.
தமாகா எந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட போகிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கூட்டணி குறித்து எந்த தகவலாக இருந்தாலும் தமாகா அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கும்.
ஏற்கனவே கூறியது போல தமாகா இறுதி நிலையை இம்மாத இறுதியில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாக புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, உண்மையாக அதுபோன்ற புகார்கள் வந்தால் தமாகா அதை எடுத்து வைக்கும் என ஜி.கே.வாசன் கூறினார்.
அதிமுக அழைப்புக்காக காத்திருப்பா?
சட்டசபைத் தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளதால் 234 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுவதாக தெரிகிறது. மற்ற கட்சிகளின் கூட்டணி ஓரளவு முடிவாகி விட்டதால் அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்த ஜெயலலிதாவை ஜி.கே.வாசன் வருகிற 25ம்தேதி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவிடம் கேட்ட தொகுதிகள் கிடைக்கா விட்டால் ஒருவேளை தனது பார்வையை மக்கள் நலக்கூட்டணியின் பக்கம் வாசன் திருப்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications