2 பெண்கள் ஒப்பாரி வைக்க.. கோலாகலமாக வேட்பு மனு தாக்கல் செய்த குடிகாரர்கள் சங்க வேட்பாளர்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ் ஆறுமுகம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ் ஆறுமுகம் பெண்கள் தலைவிரி கோலத்துடன் ஒப்பாரி வைத்துக் கொண்டு செல்ல வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் தினகரனுக்கும், மதுசூதனனுக்கும் இந்த தேர்தல் வெற்றியானது கௌரவ பிரச்னையாகும்.
திமுகவை பொருத்தவரை சட்டசபையில் கூடுதல் பலம் கிடைக்கும். அத்துடன் ஜெயலலிதா இல்லாத நிலையில் வென்றாக வேண்டிய நெருக்கடியும் திமுகவுக்கு இருக்கிறது.

6 முனை போட்டி
இத்தேர்தலிக்ல் 6 முனை போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளிடையேதான் போட்டி என்றாலும் சிறிய கட்சிகளும் பலத்தை பரிசோதிக்க களம் இறங்குகின்றன.

புதுமை சுயேட்சைகள்
ஆனால் சுயேட்சைகள், சிறு கட்சிகளை பொருத்தவரை சில புதுமைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்படி கையில் தராசு ஏந்தியும், ரூ.10 நாணயம் செல்லும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த டெபாசிட் தொகையை ரூ.10 நாணயங்களாக கொண்டு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மதுகுடிப்போர் விழிப்புணர்வு
அந்த வகையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் சின்னம் மதுபாட்டிலாகும். தலைவிரி கோலத்துடன் ஒப்பாரி வைத்துக் கொண்டு பெண்கள் படை சூழ வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பூரண மதுவிலக்கு
இவர்களது நோக்கமே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவது, மதுவால் விதவைகளான பெண்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவது ஆகும். இவரது புதுமை இந்த தேர்தலில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications