வடசென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் அதிரடி மாற்றம்
வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகர் அதிரடியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
சென்னை: வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ரூ.100 கோடி வரை பணம் விநியோகம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ராவிடம் திமுக, பாஜக ஆகியன புகார் அளித்தன.

இந்நிலையில் இந்த தேர்தல் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்கு சாவடிகளை ஆய்வு செய்வது, வாக்கு எண்ணிக்கை பகுதிகளின் பாதுகாப்பு ஆய்வு என தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
பணப்பட்டுவாடா புகார் வந்தாலும் தேர்தல் நடத்தப்படும் என்றும் புகாருக்குள்ளான காவல் துறை அதிகாரிகள் இடம் மாற்றப்படுவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி, வட சென்னை காவல் துறை இணை ஆணையராக இருந்த சுதாகரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications