பாண்டியன் எக்ஸ்பிரஸில் வட மாநில ஜோடிகள் சில்மிஷம்: நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர்
மதுரை: மதுரையில் இருந்து சென்னை கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸில் வட மாநிலத்தை சேர்ந்த இளம் ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபட்டன. இதையடுத்து அந்த ஜோடிகள் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டன.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. திண்டுக்கல் மாவட்டம் கொடை ரேட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் மற்றும் 2 இளம் பெண்ள் ரயிலின் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஏறினர். நள்ளிரவு 12.15 மணிக்கு ரயில் திருச்சியை தாண்டி அரியலூர் ரயில் நிலையம் அருகே செல்கையில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

ரயில் நின்றதும் ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்து விசாரணை நடத்தினர். அதற்கு பயணிகள் கூறுகையில், பி1 பெட்டியில் இருந்த வட மாநில ஜோடிகள் இரண்டு படுக்கையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் எங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த 5 வட மாநிலத்தவர்களும் அரியலூர் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும், கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை செல்வதும் தெரிய வந்தது. விசாரணைக்கு பிறகு அவர்களை ரயிலில் ஏற்ற பிற பயணிகள் மறுப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு அந்த 5 பேரும் அரியலூரில் இறக்கிவிடப்பட்டு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக கிளம்பிச் சென்றது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications