For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. நினைவிடத்தில் பரபரப்பு- முதல்வர் ஓபிஎஸ்க்கு திடீர் ஆதரவு தந்த தீபா!

ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தீபா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு கடந்த 7-ந் தேதி திடீரென சென்றார் முதல்வர் ஓபிஎஸ். அங்கு சுமார் 40 நிமிட நேரம் தியானம் செய்தார்.

O. Panneerselvam to sit at Jayalalithaa memorial? .

இதையடுத்து சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க அதிமுக இரண்டாக பிளவுபட்டது. தற்போது அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது; என்னைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்; எடப்பாடி கொடுத்த ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலில் பலர் என்னுடைய ஆதரவாளர்கள் என ஆளுநரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஆளுநரின் முடிவு என்ன? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்றார்,

அங்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்போது வருகை தந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தந்தார். முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தீபாவின் இந்த திடீர் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அதிமுக தலைவர்களை தீபாவுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தார்.

English summary
TamilNadu CM O Panneerselvam again to visit to Jayalalithaa memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X