ஸ்டாலின் திடீரென வயலில் நடப்பார்.. சைக்கிளில் போவார்.. டீ குடிப்பார்: ஓபிஎஸ் தாக்கு
நாகர்கோவில் மாநாட்டில் ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் தாக்கி பேசினார்.
Recommended Video

கன்னியாகுமரி: திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென கலர் சட்டை போடுவார், திடீரென வயலில் நடப்பார், சைக்கிளில் போவார், டீ கடையில் டீ குடிப்பார் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
நாகர்கோவிலில் நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நகைச்சுவை தாக்கு
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசினார்கள். இதில் ஓ.பன்னீர்செல்வம் நகைச்சுவையாக பேசி ஸ்டாலினை தாக்கி உள்ளார்.

பொய் பேச டாக்டர் பட்டம்
முதலமைச்சர் பேசும்போது, "எதிர்கட்சித்தலைவர் பேசுவது அத்தனையும் பொய். பொய் பேச டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்குப் பொருந்தும்." என்று கூறினார்.

தூங்க போவதில்லை
பின்னர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: "தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் அதிமுக. இந்த அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. ஏனெனில் இது குடும்ப ஆட்சி கிடையாது, ஜனநாயக முறைப்படி செயல்படும் ஆட்சி. இந்த ஆட்சி கலையும் வரை தான் தூங்க போவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார்.

டீ குடிப்பார் ஸ்டாலின்
அப்படி பார்த்தால் அவர் வாழ்நாள் முழுவதும் தூங்கவே முடியாது. ஸ்டாலின் திடீர் திடீரென கலர் கலராக சட்டை போடுவார், திடீர் திடீரென வயலில் நடப்பார், சைக்கிளில் போவார், டீ கடையில் டீ குடிப்பார். ஆனால் நாங்கள் டீ கடையே நடத்தியிருக்கிறோம். ஆர்கே நகரில் டெபாசிட் இழந்ததை ஸ்டாலின் மறந்துவிட்டார் போலும்" இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications