ஓ.பி.எஸ் கோஷ்டி எம்.பி., எம்.எல்.ஏக்கள் நாளை ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சசிகலா மற்றும் டிடிவி தினகரன்தான் தங்கள் குடும்ப ஆதிக்கத்தை அதிமுகவில் நிறுவ பார்க்கிறார்கள் என்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் குற்றச்சாட்டு. இதனால் இரு அணிகளாக இருதரப்பும் முறுக்கிக்கொண்டு நின்றனர்.

O.Pannerselvam faction MLAs and MPs will meet on tomorrow

இந்த நிலையில் நெருக்கடி காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி இப்போது இறங்கி வந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் பேட்டியளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது. பன்னீர்செல்வம் ஆதரவு, எம்.பிக்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியாஜன் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவி, அதிமுக பொதுச்செயலாளர் பதவி போன்றவை அளிக்கப்பட வேண்டும் என்பது அவரது கோஷ்டியின் டிமாண்ட். இதற்கு கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் மண்டலத்துக்காரரான எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடர வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.

இந்த இழுபறி நிலை பற்றி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு நாளை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு சுமார் 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவும், கணிசமான எம்.பிக்கள் ஆதரவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
O.Pannerselvam faction MLAs and MPs will meet on tomorrow to discuss AIADMK merger.
Please Wait while comments are loading...