போன மாசம் கூட என்னை பார்க்க ஓபிஎஸ் முயன்றார்.. அதையும் அவரே ஒப்புக்கொள்வார்.. தினகரன் அதிரடி பேட்டி
Recommended Video

பெங்களூர்: கடந்த செப்டம்பர் கடைசி வாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்னை தொடர்பு கொண்டார் என்பதையும் அவர் ஒப்புக்கொள்வார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை இன்று, டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம், டிடிவி தினகரன் கூறியதாவது:
என்னை ஏன் ஓ.பி.எஸ் ரகசியமாக சந்திக்க வேண்டும்? அதுவும் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் என்னை ஏன் பார்க்க வேண்டும் அவர்.
[தங்கமணி என்ன அதிமுகவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவா.. தினகரன் கிண்டல்!]

வாக்களித்தார்
ஓபிஎஸ் துரோக சிந்தனை கொண்டவர். எடப்பாடி பழனிச்சாமியை ஒதுக்கி விட்டு என்னுடன் சேர்ந்து செயல்பட விரும்பினார். எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்று துடிக்கிறார். அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வாக்களித்தவர் ஓ.பி.எஸ். ஆனால் ராஜவிசுவாசம் குறித்து அவர் பேசுவது நியாயமா. ஓபிஎஸ் என்னிடம் பேசியது பொய் தகவல் என எல்லோரும் சொல்லி வந்தீர்கள். ஆனால் அவரே அதை ஒப்புக்கொண்டுவிட்டார்.

செப்டம்பர்
செப்டம்பர் கடைசி வாரத்தில் அதே நண்பர் மூலம், ஓ.பன்னீர்செல்வம் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். இதையும் ஓ.பன்னீர்செல்வம் வாயால் ஒப்புக்கொள்வார், அந்த சூட்சுமம் எனக்கு தெரியும்.

அதையும் ஒப்புக்கொள்வார்
இன்னும் கொஞ்சம் அவருக்கு நேரம் கொடுக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் எல்லாவற்றையும் ஒத்துக் கொள்வார். அப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால் அந்த தகவலை நான் வெளியிடுவேன். ஓபிஎஸ் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். இதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.

தனி மனிதர்
அரசியலுக்காக முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் பழக்கம் எனக்கு இல்லை. உண்மைன்னா உண்மை என்பேன்.. இல்லை என்றால் இல்லை என்பேன். ஓ.பன்னீர் செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார். அவருடன் இருந்த பத்து பத்தினைந்து பேரையும் அவர்கள் இழுத்து விட்டார்கள் என்று தினகரன் தெரிவித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications