Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்சம் கேட்டு விவசாயிக்கு டார்ச்சர்.. முதல் தவணை 5 ஆயிரம் போதும்.. வசமாக சிக்கிய அதிகாரி

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசியில் பூந்தோட்டத்திற்கு புதிய மின் இணைப்பு கொடுக்க முதல் தவணையாக 5 ஆயிரமும், மீதி தொகையை பிறகும் கொடுக்குமாறு விவசாயியிடம் கறாராக கூறிய மின் செயற்பொறியாளர் உள்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவில் உள்ள தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வண்டிக்கார மாரிமுத்து (64). விவசாயியான இவருக்கு ராயகிரி கிராமப் பகுதியில் 46 சென்ட் நன்செய் நிலம் வைத்துள்ளார். இந்த நிலத்தை தனது மகன் பேச்சியப்பனுக்கு தானக் கிரையம் செய்து கொடுத்துள்ளார். அந்த நிலத்தில் பூந்தோட்டம் அமைப்பதற்காகவும், கிணற்றில் பாசனத்துக்காக மின்மோட்டார் பொருத்தவும் புதிய மின் இணைப்பு வாங்க முடிவு செய்துள்ளனர்.

tenkasi crime bribe

இதையடுத்து, வண்டிக்கார மாரிமுத்து புதிய மின் இணைப்பு கோரி சிவகிரி சந்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். சிவகிரியில் உள்ள உதவி மின் செயற்பொறியாளர் அலுவகத்திற்குச் சென்று அதிகாரியை சந்திக்கும்படி அலுவலகத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். அங்கு சென்ற வண்டிக்கார மாரிமுத்து உதவி செயற்பொறியாளர் முத்துகுமாரிடம் புதிய மின் இணைப்பு வழங்கக் கேட்டுள்ளார்.

அப்போது, அவர் நிலத்தை பார்வையிட்ட பின்னரே மின்‌ இணைப்பு வழங்க முடியும் என்று அதிகாரி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், போர்மேன் மருதுபாண்டி ஆகியோர் வண்டிக்கார மாரிமுத்துவின் நிலத்தை அடுத்த நாளே பார்வையிட்டுள்ளனர். பின்னர், விவசாயத்திற்காக மின் இணைப்பு வேண்டும் என ஆன்லைனில் விண்ணப்பித்தால் குறைந்த கட்டணத்தில் மின் இணைப்பு பெறலாம். அந்தப் பணிகளுக்கு போர்மேன் உங்களுக்கு உதவி செய்வார் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, மருதுபாண்டி செப்டம்பர் 23 ஆம் தேதி சிவகிரி இ-சேவை மையத்தில் ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். பின்னர், புதிய மின் இணைப்பு கட்டணமாக ரூ. 16,499 செலுத்த வேண்டும் என்றும், மின் இணைப்பு வழங்க மின் உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், எனக்கும் சேர்த்து 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அப்போது, மருதுபாண்டி முதல் தவணையாக ரூ. 5,000 கொடுங்கள். மீதி பணத்தை மின் இணைப்பு பெற்ற பின்னர் தர வேண்டும் என உதவி செயற்பொறியாளர் முத்துகுமார் கூறியதாகக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த வண்டிக்கார மாரிமுத்து புதிய மின் இணைப்பு வழங்க மின் வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்டது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், வண்டிக்கார மாரிமுத்துவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மின் வாரிய அதிகாரியிடம் வழங்கும்படி கூறி அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, சிவகிரி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற விவசாயி லஞ்சப் பணத்தை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பால்சுதர், அதிகாரிகள், போலீஸார், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் போர்மென் மருதுபாண்டி ஆகியோரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர். மின் இணைப்பு கேட்ட விவசாயியிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் வசமாக சிக்கிய சம்பவம் சிவகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+