"ஓலா"லா ஐலசா... வெள்ள நீரில் தத்தளித்த சென்னை மக்களை மீட்ட "ஓலா படகுகள்"!
சென்னை: வெனிஸ் நகரமாக மாறிப் போன சென்னை நகர மக்களுக்கு ஓலா கேப்ஸ் நிறுவனமும் தன்னால் முடிந்த சேவையைச் செய்து மக்களை அட போட வைத்துள்ளது.
டாக்சி நிறுவனமான ஓலா, சென்னையில் தனது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் களத்தில் இறக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும், வெள்ள நீரில் தத்தளித்தவர்களை மீட்டு வருவதற்கும் பயன்படுத்தி மக்களின் பாராட்டுக்களைப் பெற்றது.

இதுகுறித்து ஓலா வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்களது படகுகளையும், பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களையும் அனுப்பி மக்களை மீட்டுள்ளோம். தீயணைப்புத் துறையினர் எங்களுக்குத் தந்த தகவல் அடிப்படையில் இதைச் செய்தோம் என்று கூறப்பட்டுள்ளது.
BREAKING : OLA deploys Ola boats in Chennai, not a joke, people rescue underway.
Posted by Ck Mohammed on Tuesday, November 17, 2015
இந்த படகுகளை பயிற்சி பெற்ற படகோட்டிகள் செலுத்தினர். மேலும் மீனவர்களையும் இதில் ஓலா நிறுவன்ம் ஈடுபடுத்தியதாம்.மீட்கப்பட்டதோடு நில்லாமல் அவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றையும் ஓலா இலவசமாக கொடுத்து உதவியுள்ளது.
#OLA brings boats to evacuate people from flooded areas. #chennairains #ChennaiFloods pic.twitter.com/6ItvMKSl2C
— Tamil Movies (@tamil_films) November 17, 2015 ஒவ்வொரு படகிலும் 2 படகோட்டிகள் இருந்துள்ளனர். குடைகள் உள்ளிட்டவையும் அதில் இருந்துள்ளன. ஒரு படகுக்கு 5 முதல் 9 பேர் வரை மீட்டு வந்துள்ளனர்.
Ola is out-Ubering Uber in India pic.twitter.com/8pMw9em9co
— Jon Russell (@jonrussell) November 17, 2015 அடுத்த 3 நாட்களுக்கு இந்தப் படகு சேவையை நடத்தப் போவதாகவும் ஓலா அறிவித்துள்ளது. இன்னும் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications