ஐ.டி கம்பெனிகளுக்கு அனுமதி இன்றி சவாரி அடித்த 10 ஆம்னி பஸ்களுக்கு ஆப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனுமதியில்லாமல் ஐ.டி.நிறுவனங்களுக்கு இயக்கப்பட்ட 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சோழிங்கநல்லூரில் இன்று ஐ.டி நிறுவனங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களையும் தணிக்கை செய்தது. அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட பஸ்கள் சிக்கியது.
மொத்தம் 10 பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பஸ்களை சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
அந்த பஸ்களுக்கு ரூபாய் 15 லட்சம் வரை வரி பாக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக பஸ் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications