கருணாநிதியின் அந்த பொன்மொழி.. சமாதியில் இருந்த முரசொலி.. அழகிரி சென்டிமென்ட்!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் முரசொலி பத்திரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் முரசொலி பத்திரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அங்கு வித்தியாசமான அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி மு.க அழகிரி நடத்தும் பேரணிக்கு பெரிய ஏற்பாடுகள் தயாராகி உள்ளது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி தலைமையில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெரிய ஏற்பாடுகள்
இதற்காக கருணாநிதியின் சமாதி பெரிய அளவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான மலர்கள் தூவப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. துறை தயாநிதியின் அறிவுரையின் படி இந்த அலங்காரம் பார்த்து பார்த்து செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதியின் அந்த பொன்மொழி
இந்த நிலையில் கருணாநிதியின் சமாதியில் அவர் எழுதிய பொன்மொழி ஒன்று போஸ்டராக வைக்கப்பட்டுள்ளது. அதில் ''நமது இலட்சிய வழியில் வரும் முட்டுக்கட்டைகளை கண்டு பதறாமல், அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும், நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று நினைத்துக் கொள்ள வேண்டும்'' என்று வசனம் பிடித்துள்ளது.

முரசொலி பத்திரிகை
அதேபோல் கருணாநிதியின் சமாதியில் இன்று முரசொலி பத்திரிகை வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைப்பு செய்தி அதில் இடம்பெற்றுள்ளது. சோபியா விவகாரத்தில், ஸ்டாலின் விடுத்த அறிக்கை அந்த தலைப்பு செய்தியில் இடம் பிடித்துள்ளது. அதில் ''மிரட்ட நினைப்பது அபாயகரமான போக்காகும்'' என்ற வரி உள்ளது. எதேர்ச்சையாக அது தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்தி போகிறது.

போஸ்டர் வசனம்
மேலும் சென்னையில் மெரீனாவை நோக்கி செல்லும் சாலை முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அழைக்கிறார் அழகிரி, மதுரை சூரியன் சென்னையில் என்று வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதே சமயம் இதில் சில போஸ்டர்களை மர்ம நபர்கள் கிழித்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
-
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications