நீலகிரியில் மரம் விழுந்து இரண்டாக பிளந்த பேருந்து - ஒருவர் பரிதாப பலி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற தொடர் மழையின் காரணமாக பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பஸ் இரண்டாக பிளந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை துவங்கி கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், பி.மணியட்டி கிராமத்தில் இருந்து ஊட்டி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.

நுந்தளாமட்டம், தாம்பட்டி பிரிவு இடையே வந்த போது சாலையோரத்தில் இருந்த ராட்சத கற்பூர மரம் பஸ்சின் மீது சாய்ந்து விழுந்தது. இதில் பஸ் இரண்டாக பிளந்தது. இதில் காத்தாடிமட்டம் பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்று பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குல்சான் குமார் மரத்தின் அடியில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ்சில் இருந்த 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பெரும்பாலான மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்துள்ளதால் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் பரவலாக பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகரம் இருளில் மூழ்கியது.
நகருக்கு வரும் உயரழுத்த மின் பாதையில் மரங்கள் விழுந்ததால் ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக அவலாஞ்சி மற்றும் சாண்டிநல்லா துணை மின் நிலையங்கள் பாதிப்படைந்தது. நேற்று இரவு வரை ஊட்டிக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் ஊட்டி நகரம் 2 வது நாளாக இருளில் மூழ்கிக் கிடந்தது. தொடர்ந்து மழை பெய்வதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சங்கர் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications