விஜயகாந்துக்கு அறிக்கை எழுதி தரும் பேரா. ரவீந்தரனும் எஸ்கேப்... திமுகவில் ஐக்கியம்!
சென்னை: தேமுதிகவின் மாநில பட்டதாரி ஆசிரியர் அணி செயலரும் அம்பத்தூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவருமான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
தேமுதிக தொடங்கப்பட்டபோது அக்கட்சி அவைத் தலைவராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவர்தான் விஜயகாந்துக்கு ஆலோசகராக, அறிக்கைகள் எழுதி தருபவராக இருந்தார்.

பின்னர் அவர் தேமுதிகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமானார். தற்போது சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் தேமுதிகவின் பெரும்பாலான மாவட்ட செயலர்கள் அதிமுக, திமுகவுக்கு தாவி வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிகவின் பட்டதாரி ஆசிரியர் அணி செயலரும் அம்பத்தூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவருமான பேராசிரியர் ரவீந்தரன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
இதனால் விஜயகாந்துக்கு இனி அறிக்கைகளை யார் எழுதித் தருவார்? என்ற கேள்வி அக்கட்சியில் எழுந்துள்ளது. இதனிடையே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. துணை செயலாளர் என்.ஆஸ்டின் தலைமையில் மேற்கு நெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் என்.மோசஸ் சந்திரா, குருந்தன்கோடு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜே.சத்தியதாஸ், கல்லுக்கூடம் இளைஞர் அணி அமைப்பாளர் ஜே.ஜெயா, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் டி.குமார், குருந்தன்கோடு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் டி.விஜயன் ஆகியோரும் தி.மு.க.வில் நேற்று இணைந்தனர்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications