தாறுமாறாக சிதறும் அதிமுக.. வைகைச் செல்வன் தலைமையில் மேலும் ஒரு கோஷ்டி?
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தலைமையில் புதிய கோஷ்டி உருவாகியுள்ளது.
சென்னை: முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தலைமையில் அதிமுகவில் மேலும் ஒரு கோஷ்டி உதயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக மூத்த நிர்வாகிகள் வைகை செல்வன் தலைமையில் தனியே ரகசிய ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டாக உடைந்துள்ளது. இதில் ஈபிஎஸ் அணியும் பல கோஷ்டிகளாக சிதறுண்டு வருகிறது.

தோப்பு கோஷ்டி
கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள், தலித் எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தனித் தனியாக ஆலோசனை நடத்தி பரபரப்பை கிளப்பினர். இதனைத் தொடர்ந்து தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11 எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.
செந்தில் பாலாஜி
இந்த தோப்பு கோஷ்டியை இயக்குவதே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தலைமையில் திடீரென அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை நடத்தி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
வைகைச் செல்வன்
சென்னையில் கடந்த சில நாட்களாக இந்த கோஷ்டியின் ரகசிய ஆலோசனை தொடருகிறது. அதிமுகவில் தங்களுக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும்; இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் வலியுறுத்துவோம் எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
எடப்பாடி அரசுக்கு நெருக்கடி
அதிமுகவில் எந்த திசையில் இருந்து எந்த கோஷ்டி கிளம்பும் என தெரியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications