இல்லை என்று சொல்லாத அப்பா.. தந்தையருக்கு சல்யூட் வைக்கும் வாசகர்கள்.. பகுதி- 2
சென்னை: தந்தையர் தினத்தையொட்டி தத்தமது தந்தையரை நினைவு கூர்ந்தும், நன்றி கூறியும், உருகியும், நெகிழ்ந்தும் வாசர்கள் நமக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு பதிவும் நெகிழ வைக்கின்றன.
தந்தையர் தினம் மட்டுமல்லாமல் என்றென்றும் அப்பாவின் துணையுடன், நினைவுடன் நடமாடுவது என்பதே மிகப் பெரிய ஆசுவாசம்தான்.
தந்தையர் தினத்தையொட்டி நமது வாசகர்கள் நமக்கு அனுப்பி வைத்துள்ள மேலும் சில மடல்கள்...

நான் இருக்கேன் பாத்துக்கிறேன்டா.. தாமஸ் அற்புதராஜ்
வாசகர் தாமஸ் அற்புதராஜ் கூறுகையில், "நான் இருக்கேன் பாத்துக்கிறேன் டா" என அப்பா சொல்றப மட்டும் தான் வாழ்க்கைல ஒரு தைரியம் வரும் பாருங்க வேற யார் சொன்னாலும் அது வெறும் வார்த்தை மட்டுமே.

உன் தோளின் மேல்.. நித்தி சேது
நித்தி சேது அனுப்பியுள்ள மடலில், உன் தோளின் மேல் ஏறும் போது தெரியில்லை, கடவுளின் மேல் இருக்கிறேன் என்று. ஐ மிஸ் யூ டாட் என்று நெகிழ்ந்துள்ளார்.

இல்லை என்று சொல்லாத அப்பா.. ஷகீலா செல்வராஜ்
திருப்பூரைச் சேர்ந்த நமது வாசகி ஷகீலா செல்வராஜ் அனுப்பியுள்ள பதிவு... எனது தந்தை பெயர் தேவசகாயம். சவுதி அரேபியாவில் தற்போது வசிக்கிறார். எங்களது குடும்பத்துக்காக கடந்த 25 வருடங்களாக அவர் தன்னை வருத்திக் கொண்டு எங்களுக்காக உழைக்கிறார். எப்போது எங்களிடம் இல்லை என்று சொல்லாதவர் எங்களது தந்தை. நான் தேவசகாயத்தின் மகள் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்புக்காக தட்ஸ்தமிழுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

என் அப்பா... சி.என்.கிரிஷ்
வாசகர் சி.என்.கிரிஷ் கூறுகையில், என் அப்பா. உழைப்பின் சிகரம், உண்மையின் உருவம். கடும் உழைப்பு கூட ஈடு இணை இல்லை என்று உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். நேர்மை என்றும் உயர்வு தரும் என்று நீங்கள் தந்த பாலபாடம். எங்கள் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று சொல்வீர்கள். ஆனால், உங்கள் ஆசைகளை மனதுக்குள்ளேயே வைத்து கொள்வீர்கள். உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம். என்றும் அன்புடன். சி.என். கிரிஷ்.

சரியான பாதை காட்டிய என் தந்தை... அமுதா தனபால்
அமுதா தனபால் என்ற வாசகி நம்மிடம் தனது தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டது...எனது தந்தை வெகுளியானவர். பள்ளிப் படிப்பு கூட படிக்காதவர். ஆனால் ஆகாசவானி வானொலியில் ஆங்கிலச் செய்தி கேட்டு கேட்டு ஆங்கிலம் புரிந்து கொள்ளும் அளவுக்கு தனது தகுதியை வளர்த்துக் கொண்டவர். அதுதான் எனக்கும் உத்வேகம் அளித்து ஆங்கிலத்தை வேகமாக கற்கச் செய்தது. மற்றவர்களுடன் எனது தந்தை எப்போதும் அனுசரித்துப் போவார். அதுதான் நானும், எனது சகோதர, சகோதரிகளுடன் அனுசரித்துப் போகும் அளவுக்கு பக்குவப்படுத்தியது. தனது பெற்றோர், சகோதரிகள், சகோதரர்களிடம் அன்பு காட்டியவர் எனது தந்தை. குடும்பச் சொத்துக்களை எனது தந்தைக்குத் தராமல் போன போதும் கூட அவர்களிடம் அன்பு பாராட்டியவர். இதைப் பற்றி நாங்கள் கேட்டால், அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் உணர்வார்கள். இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே என்று சொல்வார். சமீபத்தில் கூட அவர் சொன்னார்.. எல்லா பேச்சுக்களையும் இதயத்திற்குக் கொண்டு போகாதே என்று. எனக்கு ஒரு தாயாகவும் விளங்கியவர் என் தந்தை. நான் வாழ்க்கையில் சரியான பாதையில் நடைபோட உதவிய வழிகாட்டி எனது தந்தை. எனது தந்தைக்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய தந்தையின் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

என் தந்தை கிரேட்... அய்யப்பன் கருப்பையா
தட்ஸ்தமிழ் வாசகர் அய்யப்பன் கருப்பையா தனது தந்தை குறித்து கூறுகையில், என் தந்தை மிகவும் கிரேட். எனது தந்தை ஒரு விவசாயி. அவரது குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர். எனது தந்தைதான் எனது முதல் கடவுள் என்று கூறியுள்ளார்.

அப்பாவை மிஸ் பண்றேன்... முருகேசன் ஆறுமுகம்
வாசகரன் முருகேசன் ஆறுமுகம் எழுதியுள்ள உணர்வுப் பதிவு...என்னோட அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன். எங்களுக்காக எவ்வளவோ இழந்திருக்கிறார். தினமும் நான் காலேஜ் போய்ட்டு வருவேன். ஈவ்னிங் பஸ் ஸ்டாப்ல நிப்பாரு. பஸ் விட்டு இறங்குனதும் அவரோட ஷோல்டர்ல கை போட்டு, என்னய்யா கணக்கு அப்படின்னு பேசிட்டு போவேன். அதுக்கு எங்க அப்பா, என்னடா இன்னைக்கு எத்தனை பேர்ட்ட லவ் சொன்ன அப்படின்னு சொல்லி பேசிட்டு இருப்போம். எங்க தெருவே வேடிக்கை பார்க்கும். நான் காலேஜ் 3வது வருடம் படிக்கிற வரை எங்கவோட தொப்பைல கால் போட்டு கழுத்துல கை போட்டு கட்டி பிடிச்சுதான் தூங்குவேன். எங்க அப்பா எங்களை விட்டு போறதுக்கு முன்னாடி நைட் என்ன கூப்பிட்டு என்னைய கட்டி பிடிச்சு படுத்துக்கிட்டாரு. அப்போது தெரியாது, எனக்கு அதுதான் லாஸ்ட் நைட் எங்க அப்போவோட தூங்க போறேன்னு. எங்க அப்பா எங்களை விட்டுட்டு போகும்போது என்னோட கைலதான் இருந்தாரு. அந்த நொடி எங்க அப்பா என்னை பார்த்தாரு ஒரு பார்வை.. அதை இந்த ஜென்மத்துல மறக்க முடியாது. என்னோட வாழ்க்கைல எப்போ அதிகமாக பெய்ன் தர சம்பவம் நடக்குதோ, அப்போ அந்த பார்வையை நினைப்பேன். அந்த வலி மறந்து போய்ரும். எங்க அப்பா இல்லாமா நான் 3 தடவை தற்கொலை முயற்சி பண்ணிருக்கேன். இப்போது எனக்கு எங்க அப்பாவை மகனாக பொறந்திருக்காரு. லவ் யூ கணக்கு (அப்பா).. மிய் யூ சிக்ஸ் பேஸ் (ஆறுமுகம்)












Click it and Unblock the Notifications