Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழை வீட்டில் கஞ்சி குடித்தோம்… எங்களைப் பார்த்து காப்பியடிக்கிறார்கள்: போட்டு தாக்கும் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: எங்கள் அமைச்சர்கள் ஏழைகள் வீட்டில் ஒருநாள் தங்கினார்கள். அவர்கள் தரையில் அமர்ந்து பழைய கஞ்சி குடித்தார்கள் எங்களைப் பார்த்து இப்போது பிற கட்சியினர் காப்பியடிக்கின்றனர் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

தமிழகத்தில் மாற்றம் வந்தால்தான் முன்னேற்றம் வரும். அந்த முன்னேற்றத்தை அன்புமணியால் மட்டுமே கொடுக்க முடியும். ஊழலை தடுத்து நிறுத்தினால் சொர்க்கபுரியாக மாற்றமுடியும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி, பஞ்சப்பூரில் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பழைய கதைகளை கூற ஆரம்பித்தார். பாமகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அவர் மட்டுமல்ல எம்பியா இருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ஒரு நாள் இரவு ஒரு கிராமத்திற்கு சென்று தங்கி, சாப்பிட்டு, அங்கேயே படுத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். இதுவரை எந்தக் கட்சியாவது இதுபோன்று செய்திருக்கிறார்களா என்றார்.

ஏழையின் வீட்டில் தங்கினோம்

ஏழையின் வீட்டில் தங்கினோம்

வேலு ஒரு கிராமத்திற்கு சென்று இந்த ஊரில் கதவு இல்லாத, மின்சார வசதி இல்லாத வீடு இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்றதும், அந்த வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டில் கட்டில் கூட கிடையாது. அமைச்சர் வந்திருக்கிறார் என்று வேறொரு வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வந்து போட்டார்கள். அங்கேயே தங்கினார். என்ன வேலு சாப்பிட்டீங்க என்றேன். ஏதோ ஒரு கஞ்சி கொடுத்தாங்க, குடிச்சேன் என்றார். அது ஒரு அருந்ததியர் வீடு. இதை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. பத்திரிகைகளும் அப்போது இல்லை. கேமரா, பத்திரிகைகளை அழைத்துப்போய் இதுபோன்று செய்கிற பழக்கம் இல்லை.

பழைய கஞ்சி சாப்பிட்டேன்

பழைய கஞ்சி சாப்பிட்டேன்

15 வருடங்களுக்கு முன்பு நான் ஈரோடு சென்றிருந்தேன். அப்போது சாப்பாட்டு நேரம் வந்தவுடன் சாப்பாடு வருகிறது என்றனர். நான் கேட்டேன். நம்ம கட்சியின் ஏழ்மையான தொண்டர். குடிசையில் இருக்கிற தொண்டர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு, அங்கு சென்றோம். குடிசைக்குள் குனிந்துதான் செல்ல வேண்டும். என்ன இருக்கு என்றோம். பழைய கஞ்சி இருக்கிறது என்றதும், அதை வாங்கி சாப்பிட்டோம். இதையெல்லாம் நாங்க என்ன விளம்பரத்துக்காகவா செய்தோம். நம்ம தொண்டர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக செய்வது இதுதெல்லாம்.

காப்பியடிக்கும் கட்சிகள்

காப்பியடிக்கும் கட்சிகள்

அப்ப செய்ததை இப்ப நான் செய்தால் மற்றக் கட்சிக்காரர்கள் காப்பியடிப்பார்கள். காப்பியடிக்கிறார்களே அதனை மறைமுகமா அடிச்சா பரவாயில்லை. ஈயடிச்சான் காப்பியடிக்கிறார்கள். தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கிறார்கள். அதனை காப்பியடிச்சாலும் ஒன்றும் நடக்காது. நாங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். ஒரு குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து அதனுடைய கல்வியின் முழு செலவினையும் ஏற்று, அதன் பிறகு 88, 90 வயது ஆகும் வரை பாதுகாக்க தேவையான பட்ஜெட்டை போட்டுவிட்டோம்.

பாமக திட்டங்கள்

பாமக திட்டங்கள்

நாங்கள் சொல்லாத விசயம் என்ன இருக்கு. பொருளாதாரம், தொழில், நல்ல ஆட்சி, வேளாண்மை, கல்வி, தரமான சுகாதாரம் என எதையும் விடவில்லை. ஏதோ 4 வரி அல்ல. ஒவ்வொன்றிலும் 15 பாயிண்ட் என பாமக திட்டங்களை சொல்லியிருக்கிறோம். இதனை நாங்கள் காப்பியடிக்கவில்லை. சுயமாக நாங்கள் வடிவமைத்தது.

மாற்றம் முன்னேற்றம்

மாற்றம் முன்னேற்றம்

தமிழகத்தில் மாற்றம் வந்தால்தான் முன்னேற்றம் வரும். அந்த முன்னேற்றத்தை அன்புமணியால் மட்டுமே கொடுக்க முடியும். அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது புகையிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தார். தமிழகத்தில் இளைஞர்கள் குடித்து சீரழிவதை தடுக்க நான் கடந்த 35 வருடங்களாக போராடி வருகிறேன். இதனை வேறு யாராவது செய்தது உண்டா?

முதன்மை மாநிலம்

முதன்மை மாநிலம்

தரமான கல்வியும், பயிற்சியும் தான் நாட்டிற்கு முன்னேற்றத்தை கொடுக்கும். இதன் மூலம் அதிக உற்பத்தி ஏற்பட்டு விலைவாசி குறையும். எனவே நாங்கள் கல்வியில் அதிக முதலீடு செய்வோம். அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இதன் மூலம் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறும்.

காமராஜர் ஆட்சி

காமராஜர் ஆட்சி

தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர். 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். படிக்க வழியில்லாத குழந்தைகளுக்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தொழிற்சாலைகளை திறந்தார். அணைகள் கட்டினார். அவர் படிக்க சொன்னார். இவர்கள் குடிக்க வைத்தார்கள்.

ஊழல் கட்சிகள்

ஊழல் கட்சிகள்

ஊழலின் ஒட்டு மொத்த உருவம்தான் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள். தமிழகத்தில் ஆற்று மணல், தாது மணல் எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தினால் தமிழகத்தை சொர்க்க புரியாக மாற்றலாம். எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மாற்றத்திற்காக காத்து இருக்கும் மக்கள் பா.ம.க.வை ஆதரிக்க வேண்டும் என்று கூறி முடித்தார் டாக்டர் ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+