புல்வெளி புல்வெளி.. பனித்துளி பனித்துளி.. உறைபனியில் உறைந்த உதகை.. நடுங்க தொடங்கிடுச்சு "ஊட்டி"
ஊட்டியில் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
ஊட்டி: உதகையில் உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.. கடந்த 2 நாட்களாகவே உறைபனியின் தாக்கம் நீலகிரி மாவட்டத்தில் அதிகமாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வருடந்தோறும், நவம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரையிலோ அல்லது மார்ச் முதல் வாரம் வரையிலோ உறைபனி விழுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை அப்படி இல்லை.. நவம்பர் துவக்கத்திலேயே நீர் பனி கொட்டியது... இதனால், ஊட்டி உட்பட பல்வேறு இடங்களில் பனியின் பிடியில் மக்கள் சிக்கினர்.

ஊட்டி
கடந்த மாத துவக்கத்தில் சில நாட்கள் உறைபனி காணப்பட்டாலும், அதன்பிறகு, உறைப்பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது... பிறகு மீண்டும் கடந்த வாரம் முழுக்க மாவட்டத்தில் நீர் பனி கொட்டியது... ஊட்டி மற்றும் சுற்றுப் புற பகுதிகளில், உறைபனி அவ்வப்போது விழுகிறது.. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங்மட்டம், கேத்தி போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.. இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்ததுபோல, ஒயிட் கலரில் காட்சியளிக்கின்றன..

நீர்பனி
இதேபோல் தாவரவியல் பூங்கா, தாழ்வான பகுதிகளில் இருக்க கூடிய புல்வெளிகளிலும் உறைபனி காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாகவே, பகல்நேரங்களில் வறண்ட நிலை நிலவி வந்த நிலையில், நேற்றிரவு முதல் நீர்பனி கொட்ட துவங்கி உள்ளது.. இதனால், காலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.. இரவு நேரங்களில் பெய்யும் நீர்பனி, உறைபனி காரணமாக, நீலகிரியின் பல்வேறு பகுதிகளில், நீண்ட நேரத்துக்கு பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது..

பகலில் லைட்டுகள்
இதனால் கடுங்குளிர் நிலவி வருவதுடன், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிகிடக்கும் சூழலும் உருவாகி உள்ளது.. பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து, வெறிச்சோடி காணப்படுகிறது.. கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களில் பகல் நேரத்திலேயே விளக்குகளை எரிய விட்டு செல்கிறார்கள்.. கடும் குளிர் காரணமாக, தினந்தோறும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகளின் வருகையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது..

பனிமுத்துக்கள்
கடந்த 2 நாட்களாக, ஊட்டி, தலைகுந்தா, நடுவட்டம், பைக்காரா, அப்பர் பவானி, அவிலாஞ்சி உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் உறைபனி பொழிவு பெய்து வருகிறது.. சாலைகளில் முத்துக்கள் பதித்தது போல் புல்வெளிகள் அனைத்தும் பனியால் வெள்ளை வெள்ளை என படர்ந்து காணப்படுகிறது.. வீட்டின் மேற்கூரைகள் அனைத்தும் பனிமலைகள் போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.. இப்போதுதான் டிசம்பர் துவக்கம் என்பதால், இம்மாத இறுதிக்குள் உறைபனியின் அளவு கூடும் என தெரிகிறது.. வருகிற ஜனவரி இறுதிவரை இந்த உறைபனி தாக்கம் நீலகிரியில் சூழ்ந்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications