தேம்பி தேம்பி அழுது.. ஐயோ, நடுகாட்டில் "காமுகன்" கொடூரம்..சத்தமில்லாமல் அடங்கிய பெண்ணின் உயிர்மூச்சு
ஊட்டி: 14 வயது பிஞ்சு என்றுகூட பார்க்காமல், பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றுள்ளார் 25 வயது நபர்.. அந்த குழந்தையை பறிகொடுத்த பழங்குடி குடும்பத்தினர், கதறி அழுதது நீலகிரியையே நிலைகுலைய வைத்துவிட்டது.. ஊட்டியில் என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ளது பழங்குடியின கிராமம்.. இங்கு வசித்து வரும் தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி, ஊட்டியில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இவருக்கு 14 வயதாகிறது.. இபபோது ஸ்கூலில், இறுதித்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.. சம்பவத்தன்று, ஸ்கூலுக்கு போன மாணவி, சாயங்காலம் வீட்டுக்கு வரவில்லை.. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் சிறுமியைத் தேடியிருக்கிறார்கள்.

காட்டுப்பகுதி: அப்போது, அங்கிருந்த காட்டுப்பகுதியில், சந்தேகத்துக்குரிய வகையில் வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், பதறியடித்துக் கொண்டு, உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி சடலமாக கிடந்திருக்கிறார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதனர் குடும்பத்தினர்.. மாணவி அணிந்திருந்த ஸ்கூல் யூனிபார்ம், அவிழ்க்கப்பட்டிருந்ததாம். அதாவது, அங்கர்போர்டு என்ற பகுதி அருகே இந்த காட்டுப்பகுதி உள்ளது..
இங்குள்ள புதர் ஒன்றில், அந்த சிறுமி சடலமாக கிடந்தாள்.. உடம்பெல்லாம் நிறைய காயங்கள் இருந்தன.. இதையடுத்து போலீசாருக்கு தகவல் சொல்லவும், பைக்காரா போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து, துரிதமான நடவடிக்கையில் இறங்கினர்.. சிறுமியின் சடலத்தை மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஊட்டி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்... ஸ்கூலுக்கு போன பழங்குடி சிறுமி, நடுக்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட துயரத்தை அறிந்த நூற்றுக்கணக்கான பழங்குடிகள், மார்ச்சுவரி முன்பு கூடிவிட்டனர்.. அவர்களின் கதறல் காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது..
மாணவியின் சடலம்: இதுகுறித்து பேசிய காவல்துறையினர், "கூட்டாகச் சேர்ந்து சிலர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்திருப்பதை முதல்கட்ட விசாரணையில் கண்டறிந்திருக்கிறோம்... இந்தக் கொடூரத்தைச் செய்தவர்களைக் கண்டறிந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். மாணவியின் சடலத்துக்கு பக்கத்தில், நின்றுகொண்டிருந்த காரில்தான், மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
பலாத்காரம்: ஆனால், மாணவியை பலாத்காரம் செய்தது யார்? இதில் ஒரு நபர் ஈடுபட்டரா? அல்லது கும்பலாக ஈடுபட்டனரா? என்ற அடுத்தக்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர். எனவே, அந்த கார் யாருடையது என்பதையும் ஆராய்ந்தனர். இதில், ராஜேஷ் குட்டன் என்பவர் பெயர் அடிபட்டது.. 25 வயதாகிறது.. கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்தவர்.. அந்த கார் இவருக்கு சொந்தமானதுதானாம்.. இவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொலையும் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார். தலைமறைவாக இருந்த ராஜேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி இளைஞரை தேடி வந்த நிலையில், இறுதியில் சிக்கினார்.. அதே பகுதியில் ராஜேஷ் குட்டன் பதுங்கியிருந்துள்ளார்.. அவரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மதுபோதை: பிறகு, அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மாணவி கொலையில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.. சம்பவத்தன்று, ஸ்கூல் முடிந்து, வீட்டுக்கு போவதற்காக, பஸ்ஸுக்காக சிறுமி காத்திருந்திருக்கிறார்.. அப்போதுதான், ராஜேஷ் குட்டன் அங்கு வந்திருக்கிறார்.. இவரும் அதே பகுதியை சேர்ந்தவர்தானாம்..
வரும்போதே மதுபோதையில் வந்திருக்கிறார்.. சிறுமியிடம் காரை நிறுத்திவிட்டு, வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடுவதாக சொல்லி அழைத்து சென்றுள்ளார்... ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதாலும், தெரிந்த நபர் என்பதாலும்தான், சிறுமி அந்த காரில் ஏறியிருக்கிறார்.. காரில் ஏறியதுமே, காட்டுக்குள் வண்டியை திருப்பி, இப்படி ஒரு கொடூரத்தை செய்துள்ளான் காமுகன்..
நடுக்காட்டில் கொடூரம்: சாயங்காலம் ஆகியும் சிறுமியை காணோம் என்று குடும்பத்தினர் காட்டுப்பகுதியில் தேடியபோது, அந்த காட்டுக்குள்ளிருந்து ராஜேஷ் குட்டன் தன்னுடைய காரில் வெளியே வந்திருக்கிறார்.. அவரிடமே, சிறுமியை பற்றி விசாரித்திருக்கிறார்கள் உறவினர்கள்.. அதற்கு அவர் போதையில் உளறினாராம்.. முன்னுக்குப்பின் முரணாகவும் பதிலளித்துள்ளார். அதற்கு பிறகுதான் உள்ளே சென்று காட்டுக்குள் தேடியபோது, சடலத்தை கண்டுள்ளனர்.. இன்னும் அந்த இளைஞரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த குடிபோதை, இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ?!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications