ஓபிஎஸ் உட்பட 12 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரும் வழக்கு... சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களும் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்ததால் அவர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களும் முதல்வருக்கு எதிராக வாக்களித்ததால் அவர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் வரும் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் 11 எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் தனித்து செயல்பட்டு வந்தார். மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவுபடி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் கடந்த பிப்ரவரி 18-ஆம்தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அப்போது அவருக்கு எதிராக ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்த நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே முதல்வர் மீது நம்பிக்கை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த 18 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின்படி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துஉத்தரவிட்டார். இந்நிலையில் திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 25-ந் தேதி வழக்கு தொடர்ந்தார். அதில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்கள் மீது 6 மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று சக்கரபாணி குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ரவிச்சந்திரபாபு, திமுக வழக்கு குறித்து சபாநாயகர் வரும் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications