For Quick Alerts
For Daily Alerts
8-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

8-ஆவது முறையாக தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்- வீடியோ
சென்னை: 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை 8-ஆவது முறையாக தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்.
2018-19-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

முன்னதாக ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி தனது உரையை தொடங்கினார். இவர் 8-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு முதல் முறையாக எடப்பாடி தலைமையிலான அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
அப்போது அதிமுக பிளவுப்பட்டு அமைச்சரவையில் ஓபிஎஸ் இல்லாததால் நிதி அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தாக்கல் செய்தார். பின்னர் அதிமுக இணைந்தவுடன் நிதி அமைச்சர் பொறுப்பை ஓபிஎஸ் ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!