தீபா சொல்லும் இந்த புகாரை சிரிக்காமல் படிக்கவும், ப்ளீஸ்!
என் தொண்டர்களை ஓபிஎஸ் அவர் பக்கம் இழுத்து கொண்டதாக தீபா கூறியுள்ளார்.
Recommended Video

திருச்சி: என்னுடைய தொண்டர்களை ஓபிஎஸ் அவர் பக்கம் இழுத்து கொண்டதாகவும், அரசியல் ரீதியாக ஓபிஎஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
திருச்சியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார்.

செய்தியாளர்களிடம் ஜெ.தீபா கூறியதாவது:
ஓபிஎஸ், அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றிவிட்டு என்னிடம் இருந்த தொண்டர்களை அவரது பக்கம் இழுத்துக்கொண்டார். இதனால்தான் அவருடைய கட்சியில் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி நீடிக்கும் பட்சத்தில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். மத்தியிலும், மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி தான் நடந்து வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல்கள் நடக்குமா? என்பதே சந்தேகமாக உள்ளது.
இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், ஜெ.தீபாவும் 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வந்தார். அவருக்கும் சில தொண்டர்கள் ஆதரவளித்தனர்.
ஆனால், ஜெ. இறந்தவுடன் போயஸ் தோட்ட இல்ல வீட்டிற்கு வீட்டிற்கு உரிமை கொண்டாடியது, தம்பி தீபக்குடன் ஏற்பட்ட சண்டை, பண மோசடி குறித்த புகார் என சர்ச்சைகள் ஒவ்வொன்றாக, அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதன்காரணமாக முக்கிய செய்திகளில் எல்லாம் தலையாய இடம் பிடித்து வந்த ஜெ.தீபா, கடந்த சில காலங்களாக ஒதுங்கி இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், ஓ.பி.எஸ்.மீதான குற்றச்சாட்டை தீபா முன்வைத்துள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications