ஜெ. பிறந்தநாளன்று.. நீதி கேட்டு பயணம் தொடங்கும் ஓ.பி.எஸ்.. தீபாவுடன்!
ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 முதல் தமிழகம் முழுவதும் நீதிகேட்டு பேரணி நடத்தப்போவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அவருடன் ஜெ.தீபாவும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதி கேட்டு பேரணி மேற்கொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஓ.பி.எஸ். உடன் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபாவும் பங்கேற்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கடந்த செவ்வாய்கிழமை இரவு சென்று மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்று கூறினார்.

ஓபிஎஸ்க்கு ஆதரவு
சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இளைஞர்கள், பொதுமக்கள், அதிமுக தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

எடப்பாடிக்கு எதிர்ப்பு
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதிக்கே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

ஓபிஎஸ் எம்எல்ஏக்களுக்கு வரவேற்பு
அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதையடுத்து கட்சியும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதால் மக்களிடம் நியாயம் கேட்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

ஜெயலலிதா பிறந்தநாளில் பயணம்
இந்நிலையில் இன்று ஓபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவே தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து சுற்றுபயணம் மேற்கொள்வதாகும். பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் முதல் தனது பிரசார பயணத்தை துவக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பயணம்
தமிழகம் முழுக்க ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு காவல்துறை மூலமும், தனிப்பட்ட முறையிலும் நெருக்கடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நீதிகேட்டு தமிழகம் முழுவதும் பயணம் செய்ய திட்டுமிட்டுள்ளார்.

ஓபிஎஸ் உடன் ஜெ.தீபா
தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தீபாவும் ஓபிஎஸ்சும் நீதிகேட்டு பிரசார பயணம் செல்ல உள்ளனர். முதல்கட்டமாக 122 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளார். ஓபிஎஸ் உடன் ஜெ. தீபாவும் செல்வதால் இந்த பேரணி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என்பது நிச்சயம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications