மன்னார்குடி கும்பல் அதிமுகவையே கபளீகரம் செய்து விட்டது.. ராமதாஸ்
முதல்வர் ஓபிஎஸின் பேட்டி சசிகலாவின் குடும்பம் அதிமுகவை கபளீகரம் செய்துள்ளதையே காட்டுகிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி மன்னர்குடி கும்பல் அதிமுகவை கபளீகரம் செய்திருப்பதையே காட்டுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்களை ஆளுநர் தனித்தனியே அழைத்துப் பேச வேண்டும் என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பு ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருகிறது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இது தமிழக மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் ஆளுனர் தனித்தனியே அழைத்துப் பேசிய பிறகு தான் புதிய முதலமைச்சரை தீர்மானிக்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 7, 2017
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அதிமுக எம்எல்ஏக்களை தனித்தனியே ஆளுநர் அழைத்துப் பேச வேண்டும் எனக்கூறியுள்ளார்.
ஓபிஎஸ் பேட்டி: அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.சசிகலா குடும்பம் கட்சியை கபளீகரம் செய்திருப்பதை காட்டுகிறது!
— Dr S RAMADOSS (@drramadoss) February 7, 2017
எம்எல்ஏக்களை தனித்தனியே சந்தித்தப் பிறகு புதிய முதல்வரை தீர்மானிக்க ஆளுநர் தீர்மானிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் முதல்வர் ஓபிஎஸின் பேட்டி அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சசிகலா குடும்பம் கட்சியை கபளீகரம் செய்திருப்பதை ஓபிஸ் பேட்டி வெளிப்படுத்தியுள்ளது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications