For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே. நகரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் குட்டிக்கரணம் போட்டாலும் ஜெயிக்க முடியாது - ஸ்டாலின்

ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் கூட வாங்காது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே. நகரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் குட்டிக்கரணம் போட்டாலும் ஜெயிக்க முடியாது - ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்த வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் அதிமுக ஜெயிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து 89 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.

    தற்போதைய இடைத் தேர்தலில் அது போன்று முறைகேடுகள் நடக்க கூடாது என தேர்தல் ஆணையரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    தேர்தலை தள்ளி வைத்தது ஏன்?

    தேர்தலை தள்ளி வைத்தது ஏன்?

    அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ், 'இரண்டு தரப்பினரும் ஒன்று சேர வேண்டும் என முன்பு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என தெரிவித்து இருந்தனர். எனவே, அரசுக்கு சார்பாக தேர்தல்ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மத்திய அரசு இவர்கள் சொல்வதை கேட்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.

    இடைத்தேர்தல் ஏற்கனவே ரத்தானது

    இடைத்தேர்தல் ஏற்கனவே ரத்தானது

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் முறையாக நடத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

    டெபாசிட் வாங்காது

    டெபாசிட் வாங்காது

    ஆர்.கே. நகரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து என்னதான் வாக்குறுதி அளித்தாலும், குட்டிக்கரணம் போட்டாலும், உருண்டு புரண்டாலும் அதிமுகவினால் டெபாசிட் கூட வாங்க முடியாது.

    ஆளுக்கு ஒரு கணக்கு

    ஆளுக்கு ஒரு கணக்கு

    காணாமல் போன மீனவர்கள் மீட்பு குறித்து, அமைச்சர், தலைமை செயலர், ஆட்சியர் வேறு வேறு எண்ணிக்கையை கூறுகின்றனர். மீனவர் பிரச்னையில் ஒவ்வொருவரும் ஒரு கணக்கு சொல்கின்றனர். நாளை குமரியில் தி.மு.க., மீனவர் அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடக்க உள்ளது. அந்த போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். ஆளுநரை நாளை மறுநாள் சந்திக்க உள்ளேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    3 நாட்கள் பிரச்சாரம்

    3 நாட்கள் பிரச்சாரம்

    ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேஷை ஆதரித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். டிசம்பர் 17ம் தேதி இருந்து 19ம் தேதி வரை ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் அனல் அதிகரிக்கும்.

    English summary
    DMK working president MK Stalin has said that Team OPS and EPS cannot win in RK Nagar by election. ADMK to loss deposit he added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X