டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி.. ஓபிஎஸ் வார்னிங்!
Recommended Video

சென்னை: தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறுகையில் ஜெயலலிதா இருந்தபோது அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியாக இருந்தது. அதில் 31 லட்சம் பேர் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை, அம்மா பேரவையை சேர்ந்தவர்கள்.

2 கோடிக்கு மேல்
தற்போது இளைஞர் -இளம்பெண்கள் பாசறையில் இருப்பவர்களுக்கு வயதாகிவிட்டதால் அந்த பிரிவில் உறுப்பினர் சேர்க்கை விரைவில் நடைபெறும். அச்சமயம் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 கோடிக்கு மேல் உயர்ந்துவிடும்.

ஆதரவு
அதிமுக அமைப்பு தேர்தல் முறைப்படியான அறிவிப்புடன் கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறும். எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக எங்களிடம்தான் உள்ளது. தொண்டர்களும் எங்களுக்குதான் ஆதரவு அளித்து வருகின்றனர்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இயக்கம் வலுவானதாக என்றும் நிலைத்து நிற்கும். எனவே அதிமுகவில் மீண்டும் சேராத தொண்டர்கள் டிடிவி தினகரன் பக்கம் சென்றுவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

விளக்கம் கேட்பு
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் பிரபு, கலைசெல்வன், ரத்தின சபாபதி ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications