விதிமுறைகளை மீறி கட்டிய திருச்சி ரத்னா ஸ்டோர்ஸ்.. சீல் வைக்க ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் விதிமுறைகளை மீறிக் கட்டிய ரத்னா ஸ்டோர்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் என்.எஸ்.பி. சாலையில் 4 மாடிக் கட்டிடத்தில் ரத்னா ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. இந்தக் கட்டிடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆயிஷாபேகம் என்பவர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

Order to seal Ratna Stores in Trichy

அதில், 2 அடுக்கு கட்டுவதற்கு அனுமதியைப் பெற்றுவிட்டு 4 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக ரத்னா ஸ்டோர்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ரத்னா ஸ்டோர்ஸ் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று கூறி, அதற்குச் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras high court Madurai bench ordered today to seal Ratna Stores in Trichy.
Please Wait while comments are loading...