எது ஆளுமை?
தமிழகத்தை குலுங்க வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எழுச்சிப் போராட்டத்தை நமது அமெரிக்க வாசகர் மாணிக்கம் புகழ்ந்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தைக் காக்க கடந்த 7 நாட்களாக தொடர்ந்து எழுச்சியுடன் போராடி வரும் தமிழ் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்காவின் ஆஸ்டின் நகரிலிருந்து நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு எழுதியுள்ள நெகிழ்ச்சிக் கடிதம்.
சகோதரா,
உன்னை நினைத்து பெருமை என்ற ஒரு வார்த்தை மட்டும் எனக்கு போதவில்லை. தமிழ் அகராதி புரட்டி இதைவிட வீரியம் மிக்க வார்த்தை காணத் தவிக்கிறேன். இந்திய இளைஞர் கூட்டத்தில் இன்று நீ ஒரு தனி வடிவம். உன் அறவழி ஆயுதம், உலக போராட்ட முறை வரலாற்றில் ஒரு மைல் கல். சிகரத்தை முதுகில் சுமந்து மலையேறி, மீண்டும் சிகரம் தொடுகிறாய். உன் எழுச்சி, திமிர் பிடித்த ஆளுமைக்கு, ராட்டை வழி கிடைத்த மிகப்பெரிய சாட்டையடி.

உன் அர்ப்பணிப்பு என் நரம்பு மண்டலம் நுழைந்து ரத்த ஓட்டத்தை துரிதமாக்குகிறது. தமிழன் வந்த வழியை ஆணி வைத்து அடைக்க முற்படுவோர் முகத்தில் அறைய, நீ தேர்ந்தெடுத்த இந்தப் பாதை, நம் ஆற்று வழி நாகரிக மனவலிமைக்கு ஒரு பருக்கைச் சோறு. அரசாங்கம் என்ற ஆளுமையின் ஓங்கிய இரும்பு கரத்தை மண்ணுக்கு உரமாக இட இதைவிடவும் சிறந்த வழி வேண்டுமா? மெய் சிலிர்க்கிறது நண்பனே.!
பதவியும், பணமும் பொய் பேச்சும் தான் ஆளுமைக்கு அடி அகராதி என்று திரியும் அர்த்தமற்ற பதர்களுக்கு, உன் வெறிகொண்ட இந்த அறவழி ஒற்றுமையின் அருகாமை, அவர்கள் எண்ணத்தின் ஆணிவேரையே அசைத்து இருக்கிறது. உலகம் உன்னை இன்று உற்று நோக்குகிறது. வரலாறு உன்னை பதிவு செய்ய எழுத்தாணியின் முனையை கூராக்கி வைத்துள்ளது.
இனி வரும் வருடங்களில் போராட்டம் என்ற வார்த்தைக்கு மறு வடிவம் தேடி யாரும் அலைய மாட்டார்கள். உங்களின் வைரம் பாய்ந்த இந்த இறுமாப்பு ஒன்று போதும் அதை மேலும் செப்பனிட்டு அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும். அணையாப் பெருஞ்சுடராய் எரியட்டும் இந்த தழல் உங்கள் இதயத்தில் எப்போதும்.
என் இருகரம் அகன்ற பாசாத் தழுவலும்..சிரம் தாழ்த்த அன்பும்...என்றும் உங்களுக்கே..!
- மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின். டெக்சாஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications