நீட்: தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
நீட் தேர்வை எதிர்த்து எதிர் கட்சிகள் போராட்டம்-வீடியோ

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதிகேட்டும் தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

நீட் தேர்வால் மருத்துவர் கனவை இழந்த அரியலூர் அனிதா, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்து மாண்டு போனார். அவருடைய மரணம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 All over Tamilnadu opposite parties conducting protest against neet

இந்நிலையில், அவருடைய மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதே காரணங்களை முன்னிறுத்தி திருச்சியில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தின.

அதனையடுத்து, இன்று சென்னை உள்பட அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னையில் நடந்த கூட்டங்களில் தாம்பரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All over Tamilnadu protest conducted against Neet and Justice for Anitha's death. Last week Dmk announced this protest.
Please Wait while comments are loading...