அடப்பாவிகளா.. காஸ்ட்லி காரில் பசு மாட்டைத் திணித்துக் கடத்திய இரு கில்லாடிகள்!
சென்னை: திருட்டுப் பசங்களில் பல விதம் உள்ளனர். இந்த திருடர்கள் அதில் ஒரு விதம். ஒரு காஸ்ட்லியான காரில் படு டீக்காக வந்த இரு திருடர்களும், ஒரு பசு மாட்டை காரின் பின் பகுதியில் திணித்துக் கடத்தியுள்ளனர். இது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சென்னையில்தான் அதுவும் அடையாரில் இந்த பசு மாடு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் கார் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள, இன்னொருவர் அப்படியே மெதுவாக மாட்டின் பின்பக்கமாக வந்து, பின்பக்கத்தை அழுத்தி காருக்குள் திணித்து கதவை கஷ்டப்பட்டு மூடுகிறார். பின்னர் கார் கிளம்பிச் செல்கிறது.

பசு வதை சட்டவிரோதம்
இந்தியாவில் பசு மாடுகளை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். பசுவதையும் இங்கு சட்டவிரோதமாகும். ஆனால் இந்தத் திருடர்கள் படு ஸ்டைலாக காரில் வந்து மாட்டைப் பிடித்து காருக்குள் திணித்துப் பறந்துள்ளனர்.

முரட்டுப் பசு
ஒரு வீட்டின் முன்பகுதியில் அந்தப் பசு மாடு திரிந்து கொண்டுள்ளது. பார்ப்பதற்கு அது எருமைப் பசு போல உள்ளது. அப்போது ஒரு கார் ரிவர்ஸில் வருகிறது. வந்து மாடு அருகே நிற்கிறது.

நைஸாக வரும் நபர்
காரின் முன்பகுதியிலிருந்து ஒரு நபர் ஸ்டைலாக இறங்குகிறார். இன்னொருர் டிரைவர் சீட்டில் ரெடியாக இருக்கிறார்.

பின்பக்கமிருந்து காருக்குள் திணிப்பு
இறங்கி வந்த நபர் மாட்டுக்குப் பின்புறம் போகிறார். அந்த மாடு, கார் அருகே போய் உள்ள எட்டிப் பார்க்கிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்படியே மாட்டை பின்னாலிருந்து பின் சீட்டுக்குள் கஷ்டப்பட்டு தள்ளுகிறார் அந்த நபர். சில நொடி போராட்டத்துக்குப் பின்னர் மாடு உள்ளே போய் மாட்டிக் கொள்கிறது. பின்னர் கஷ்டப்பட்டு கார் கதவை மூடி விட்டு அவர் முன்பக்கம் ஓடிப் போய் ஏற கார் வேகமெடுத்துப் பறக்கிறது.

பால் பண்ணையில்
இந்த சம்பவம் நடந்த இடம் அடையாறு, காமராஜ் அவென்யூவில் உள்ள ஒரு சிறிய பால் பண்ணையாகும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications