சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: ஜெயலலிதாவை சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம் !
சென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பல்வேறு விதமான செய்திகள் பரவிய நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில் அதிமுகவின் ஐவரணியில் முதல்வராக வலம் வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது கட்சித்தலைமையால் ஓரம்கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த சில வாரங்களாக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உலா வந்தன. இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து வெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, நிதியமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முதல்வரின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு வார்த்தை நடந்தது.
இருப்பினும், இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்பது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை இருப்பினும் பன்னீர் செல்வம் குறித்து வெளியாகும் பரபரப்பு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications