இரு குழந்தைகள் கொலை வழக்கு... அபிராமிக்கு விஷம் வாங்கிக் கொடுத்தது யார்?... பரபர தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் ஓடிப்போன தாய்- வீடியோ

    சென்னை: அபிராமிக்கு விஷம் வாங்கிக் கொடுத்தது தான்தான் என்று போலீஸாரிடம் கள்ளக்காதலன் சுந்தரம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர். இந்நிலையில் கள்ளகாதலுக்காக இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அபிராமி தப்பி சென்றுவிட்டார்.

    Paramour bought poison to kill Abiramis children and husband

    இதையடுத்து கணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் தனது மனைவிக்கு கள்ளகாதல் இருந்ததையும் இதனால் கணவன்- மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்படும் என்றும் விஜய் தெரிவித்தார்.

    இதையடுத்து கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்களை அவர் தெரிவித்தார்.

    கணவரை கொல்வதற்கு கள்ளக்காதலன் மூலம் அபிராமி விஷம் வாங்கியது தெரியவந்தது. கணவர் அலுவலகம் முடித்துவிட்டு வீடு வந்தவுடன் இரவு நேரத்தில் டீ குடிக்கும் வழக்கமாம். இதனால் கணவருக்காக பிளாஸ்கில் டீ கலந்து வைத்த அபிராமி அதில் விஷத்தையும் கலந்து வைத்தார்.

    இதனிடையே வீட்டுக்கு வரவில்லை என கணவர் கூறியதால் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரும் வாயில் நுரை தள்ளி இறந்தவுடன் அவர்கள் இறந்துவிட்டனரா என்பதை உறுதி செய்து விட்டு பைக்கில் கோயம்பேடு சென்றுள்ளார் அபிராமி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+