For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள்: கருணாநிதி, விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை

Google Oneindia Tamil News

சென்னை: தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை சிம்சன் ஜெமினி பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைகள் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

சிம்சனில் உள்ள பெரியார் சிலையின் கீழ் பகுதியில் பெரியார் உருவப்படம் மலர் தூவி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.

Party leader pay tribute Periyar E V Ramasamy on his 136th birth anniversary

கருணாநிதி மரியாதை

சிம்சனில் உள்ள பெரியாரின் சிலைக்கு, தி.மு.க தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Party leader pay tribute Periyar E V Ramasamy on his 136th birth anniversary

அதிமுக சார்பில்

இதேபோல், அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப் படத்திற்கு அ.தி.மு.க சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, ராஜ்யசபா உறுப்பினர் வெங்கடேஷ் பாபு உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விஜயகாந்த் மரியாதை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 136 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு விஜயகாந்த் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ, துணை செயலாளர் பி.முருகேசன்,இளைஞர் அணி துணை செயலாளர் கு.நல்லதம்பி எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமாளவன் மரியாதை

அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்தார்.

English summary
Leaders of various political parties today paid floral tributes to Dravidar Kazhagam founder and social reformer Periyar E V Ramasamy on his 136th birth anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X