கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் திடீர் போராட்டம்..!
கடையநல்லூர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகி்ச்சை அளிக்க டாக்டர்கள் உரிய நேரத்தில் இல்லாமல் போனதால், பொதுமக்கள் மருத்துவமனையை திடீரென முற்றுகையிட்டனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார சீரேக்டு காரணமாக, 2 வருடங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பரவியது. அதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு பரவிய காய்ச்சல் மாவட்டத்தின் பல பகுதிகளையும் ஆட்டி படைத்தது. இன்றளவும் அதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. அவ்வப்போது சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
தற்போது மழை மற்றும் குளிர்காலம் என்பதால் கடையநல்லூரில் மீண்டும காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதிக அளவிலான பொதுமக்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால் டாக்டர்கள் பணியில் இல்லாததால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கடையநல்லூரை சேர்ந்த உசேன் என்பவர் காய்ச்சல் தீவிரமானதால் கடையநல்லூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்போது டாக்டர் இல்லை. இதனால் இரண்டு மணி நேரமாக அவருக்கு சிகிக்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது போல் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செய்யது பாத்திமா என்ற பெண்ணும் சிகிச்சைக்காக இரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த போராட்டத்தால் மருத்துவமனை ஊழியர்களும், நர்சுகளும் திணறி போய் விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications