தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் பவன் ரெய்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் பதவியை பவன் ரெய்னா ராஜினாமா செய்துள்ளார். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசின் ஆலோசகராக பவன் ரெய்னா டெல்லியில் பணிபுரிந்து வந்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பவன் ரெய்னா தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

Pawan Raina has resigned as the adviser of the Government of Tamil Nadu

இவர் தமிழகம் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பாலமாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் அவருக்கு தொடர்பாக இருந்தார் புகார் எழுந்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை அவர் சென்னைக்கு அனுப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pawan Reina has resigned as the adviser of the Government of Tamil Nadu. He resigned from his post following a complaint lodged with the double leaf icon issue.
Please Wait while comments are loading...