நாட்டில் அமைதி நிலவினால் வளமும் வளர்ச்சியும் இருக்கும் - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
நாட்டில் அமைதி நிலவினால் வளமும் வளர்ச்சியும் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழக காவல்துறை உலகத்தரம் வாய்ந்தது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காவலர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டில் அமைதி நிலவினால் வளமும் வளர்ச்சியும் நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
சென்னை வண்டலூர் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் உதவி காவல் ஆய்வாளர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஓராண்டு வழங்கப்பட்டது. முதன்முறையாக இந்த ஆண்டு சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பயிற்சி பெற்றுள்ளார்.
இதன்மூலம் நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர் என்ற சிறப்பை ப்ரித்திகா யாஷினி பெற்றுள்ளார்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பயிற்சியை தொடங்கிய இவர்கள், தங்களின் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். ஓராண்டு பயிற்சி பெற்ற இவர்கள், மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உதவி காவல் ஆய்வாளராகப் பணிமயர்த்தப்படுவார்கள்.

முதல்வர் பாராட்டு
உதவி காவல் ஆய்வாளர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பழனிச்சாமி ஏற்றுக்கொண்டார். பயிற்சியை நிறைவு செய்த உதவி காவல் ஆய்வாளர்களை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்தி பேசினார்.

உலகத்தரம் வாய்ந்தது
தமிழக காவல்துறை உலகத்தரம் வாய்ந்தது. அது மேலும் வளர்ச்சியடைய சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூறிய முதல்வர் பழனிச்சாமி, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் காவல்துறையினரின் பங்கும் அர்ப்பணிப்பு உணர்வும் அதிகரித்து விட்டதாக கூறினார்.

முதல் திருநங்கை
உதவி காவல் ஆய்வாளராக திருநங்கை ஒருவர் பயிற்சி பெற்றுள்ளதற்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க பாடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வளம் வளர்ச்சி
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் அமைதி நிலவும், அமைதியின் மூலம், வளமும் வளர்ச்சியும் சீராக இருக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications